மத்தியில் புதிய அரசு அமையும் போது, வகுப்பு திருத்த மசோதா ரத்து செய்யப்படும் என மேற்குவங்க முதல்வர் கூறினார்.
மத்திய அரசு கொண்டு வந்த வக்பு திருத்த மசோதா, பாராளுமன்றத்தின் மக்களவையும் மாநிலங்களவையும் நிறைவேறியுள்ளது,. இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்த நிலையில், மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி இந்த மசோதாவுக்கு கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளார். நாட்டை பிரிப்பதற்காக வக்பு திருத்த மசோதாவை பாஜக கொண்டு வந்துள்ளதாகவும், மத்திய பாஜக அரசை அகற்றி புதிய அரசு அமையும் போது இந்த மசோதா ரத்து செய்யப்படும் என்றும், அதற்கான திருத்தத்தை பாராளுமன்றத்தில் கொண்டு வருவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அப்போது கூட அவர் “இந்தியா” கூட்டணி அரசு அமையும் என்று சொல்லாமல், "புதிய அரசு" அமையும் என்று மட்டுமே கூறியுள்ளதால், இதற்குப் பின்னால் வேறு ஏதேனும் காரணம் இருக்குமா என்ற கருத்து பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.