இந்தியாவில் வி டிரான்ஸ்பர் எனப்படும் டேட்டா பகிர்வு வலைதளத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆனலைனில் வேலை செய்பவர்கள் அனுப்ப வேண்டிய பைல்களை வி ட்ரான்ஸ்பர் மூலமாக அனுப்பி வந்தனர். அந்த வலைதளம் மூலமாக 2 ஜி பி வரை இலவசமாக பைல்களை அனுப்ப முடியும். மேலும் பணம் கட்டி சந்தாதாரர்களாக மாறுபவர்களுக்கு 20 ஜி பி வரை பைல்களை அனுப்பும் வசதி அளிக்கப்படும்.
இந்நிலையில் இந்த வலைதளத்தை இப்போது இந்தியாவில் தடை செய்துள்ளனர். இது பலருக்கும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பிரபல பின்னணி பாடகி சின்மயி தனது வருத்தத்தைப் பகிர்ந்துள்ளார். அதில் ‘ஏன் வி ட்ரான்ஸ்பரை தடை செய்தார்கள் எனத் தெரியவில்லை. இசையமைப்பாளர்கள் மற்றும் பாடகர்கள் தங்கள் தகவல்களை இதன் மூலம் பகிர்ந்து வந்தனர். இது நம்மில் பலருக்கு ஒத்துழைக்க உதவும் ஒரு கருவியாக இருந்து வந்தது’ எனக் கூறியுள்ளார்.