Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

காட்மேன் வெப்சீரீஸ் தடை: ஆட்களை சேர்க்கும் தயாரிப்பு குழு!

காட்மேன் வெப்சீரீஸ் தடை: ஆட்களை சேர்க்கும் தயாரிப்பு குழு!
, செவ்வாய், 2 ஜூன் 2020 (14:43 IST)
காட்மேன் வெப்சீரீஸ் முற்றிலுமாக தடை செய்யப்பட்டால் படைப்பு சுதந்திரமே கேள்விக்குறியாகி விடும் என தயாரிப்புக்குழு அறிக்கை. 
 
ஜீ5 ஓடிடியில் பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் “காட்மேன்” என்ற வெப் சிரீஸ் ஜுன் 12ல் வெளியாவதாக இருந்தது. இதில் டேனியல் பாலாஜி, சோனியா அகர்வால் மற்றும் ஜெயப்ரகாஷ் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். 
 
இந்த படத்தின் டீசர் சில தினங்களுக்கு முன்னர் வெளியானது. அந்த டீசரில் காட்டப்பட்டு இருந்த காட்சிகள் பிராமண சமூகத்தை கொச்சைப்படுத்தும் விதமாகவும், இந்து மதத்தை தவறாக சித்தரிக்க முயலும் ரீதியிலும் உள்ளதாக சமூக வலைதளங்களில் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் அந்த சீரிஸை தடை செய்யவேண்டும் என கோரிக்கைகள் எழுந்தன.
 
இந்நிலையில் ஜீ5 நிறுவனம் தங்கள் டுவிட்டரில், "எங்களுக்கு வந்த பல கருத்துகளின் காரணமாக தொடரின் வெளியீட்டை நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளோம். எந்த ஒரு மதம், சமூகம் மற்றும் தனிப்பட்டவர்களின் உணர்வுகளை புண்படுத்தும் நோக்கம் எங்களின் ஜீ5 நிறுவனத்திற்கோ, தயாரிப்பாளருக்கோ கிடையாது" எனக் கூறியுள்ளனர்.
 
இதனைத்தொடர்ந்து தற்போது காட்மேன் வெப்சீரீஸ் முற்றிலுமாக தடை செய்யப்பட்டால் படைப்பு சுதந்திரமே கேள்விக்குறியாகி விடும். எனவே,  படைப்பு சுதந்திரத்துக்கு எழும் ஆபத்தை திரையுலகத்தினர் ஒன்றுசேர்ந்து தடுக்க வேண்டும் என தயாரிப்புக்குழு கோரிக்கை வைத்துள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அப்படியே தொக்கா தூக்கிட்டு போயிடலாம்... சுடிதாரில் சுண்டியிழுக்கும் சாக்ஷி அகர்வால்!