Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்திய விமானங்களுக்கான வான்வழியை மூடியது பாகிஸ்தான்.. பதிலடியா?

Advertiesment
Flight

Mahendran

, வியாழன், 24 ஏப்ரல் 2025 (17:35 IST)
ஜம்மு காஷ்மீரில் உள்ள பெஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, இந்திய அரசு பாகிஸ்தான் மீது கடுமையான நடவடிக்கைகளை அறிவித்தது. இதற்கு பதிலடியாக  பாகிஸ்தான் இன்று இந்தியா தொடர்பான முக்கிய நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. 
 
இந்தியாவுடனான அனைத்து இருதரப்பு ஒப்பந்தங்களும் இடைநிறுத்தப்படுவதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது. குறிப்பாக, 1972ஆம் ஆண்டு கையெழுத்தான சிம்லா ஒப்பந்தம் உட்பட அனைத்து முக்கிய உடன்படிக்கைகளும் ரத்து என அறிவித்துள்ளது.
 
மேலும், பாகிஸ்தான் தனது வான்வெளியை இந்திய விமானங்களுக்கு மூடிவிட்டதாகவும், இந்திய விமானங்கள் பாகிஸ்தானின் வான்வெளியில் பறக்க அனுமதி இல்லை என்றும் தெரிவித்துள்ளது. 
 
இதேவேளை, இஸ்லாமாபாத்திலுள்ள இந்திய தூதரகத்தில் பணியாற்றும் அதிகாரிகள் எண்ணிக்கையை 30-ஆக குறைக்கும் முடிவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
முன்னதாக பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப், “பெஹல்காம் தாக்குதலுக்கும் பாகிஸ்தானுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை” என்று தெரிவித்துள்ளார். ஆனால், இந்தியா வெளியிட்ட தீவிரவாதிகளின் முகரூபங்கள், அவர்கள் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
 
Edited by Mahendran
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மோடி போட்ட உத்தரவு? பாகிஸ்தான் கடல்பகுதியில் நுழையும் விக்ராந்த் போர் கப்பல்? - அதிர்ச்சியில் பாகிஸ்தான்!