ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுக்கு மகாராஷ்டிர நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த 2010ஆம் ஆண்டு தடையை மீறி மகாராஷ்டிர மாநிலத்திற்குள் நுழைந்தது குறித்த வழக்கு ஒன்றில் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட 16 பேர் நீதிமன்றத்தில் ஆஜராகாததால் அவர்கள் அனைவருக்கும் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது.
சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட 16 பேர்களையும் இம்மாதம் 21ம் தேதிக்குள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்படி போலீசாருக்கு தர்மதாபாத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.