ஆகஸ்ட் 1 முதல் சில ஆண்ட்ராய்டு போனில் கூகுள் குரோம் செயல்படாது.. இந்த பட்டியலில் உங்கள் போன் இருக்கிறதா?

Mahendran
சனி, 28 ஜூன் 2025 (13:15 IST)
நீங்கள் இப்போதும் ஆண்ட்ராய்டு 8 (ஓரியோ) அல்லது ஆண்ட்ராய்டு 9 (பை) இயங்குதளத்தில் இயங்கும் பழைய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனைப் பயன்படுத்தி கொண்டிருக்கிறீர்களா? அப்படியென்றால், விரைவில் புதிய போனுக்கு மாறுவது பற்றி யோசிக்க வேண்டியது அவசியம். 
 
ஆகஸ்ட் 1 முதல்  பழைய ஆண்ட்ராய்டு வெர்ஷன்களில் இயங்கும் குரோம் பிரவுசர் சேவை நிறுத்தப்போவதாக கூகுள் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இனி குரோம் பிரவுசர் புதிய அப்டேட்களை பெற வேண்டுமென்றால், உங்கள் போனில் ஆண்ட்ராய்டு 10 அல்லது அதற்கு மேற்பட்ட வெர்ஷன்கள் இருக்க வேண்டும்.
 
எனவே நீங்கள் இப்போதும் ஆண்ட்ராய்டு 8 அல்லது 9 இயங்குதளத்தில் ஒரு போனை பயன்படுத்தினால், குரோம் உடனடியாக வேலை செய்வதை நிறுத்தாது. ஆனால், அது இனி புதிய அம்சங்களுடன் மேம்படுத்தப்படாது அல்லது பாதுகாப்பாக இருக்காது. காலப்போக்கில், அப்டேட்கள் இல்லாததால், நீங்கள் சைபர் தாக்குதல்கள் அல்லது பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு ஆளாக நேரிடலாம். 
 
"குரோம் அப்டேட்களை தொடர்ந்து பெற, ஆண்ட்ராய்டு 8.0 அல்லது 9.0 இல் உள்ள பயனர்கள் ஆண்ட்ராய்டு 10.0 அல்லது அதற்குப் பிந்தைய வெர்ஷனுக்கு மேம்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம் என கூகுள் அறிவுறுத்தியுள்ளது: 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரபல அரசியல் தலைவர் மற்றும் மகனுக்கு 7 ஆண்டுகள் சிறை.. 2 பான்கார்டு வைத்திருந்த வழக்கு..!

'இந்தியா' கூட்டணிக்கு தலைமையை மாற்ற வேண்டும்; அகிலேஷ் யாதவ் பெயரை முன்னிறுத்திய சமாஜ்வாடி!

ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை.. நீதிமன்றம் தீர்ப்பு.. கலவரம் செய்பவர்களை சுட்டுக்கொல்ல உத்தரவு..!

இன்று 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும்: ஆரஞ்ச் எச்சரிக்கை விடுப்பு..!

நவம்பர் 20ல் புதிய கட்சியை தொடங்குகிறார் மல்லை சத்யா.. திராவிடத்தில் இன்னொரு கட்சியா?

அடுத்த கட்டுரையில்
Show comments