ஓலா மற்றும் ஊபர் போன்ற டாக்ஸி ஆப்களில் டாக்சி புக் செய்யும்போது பயன்படுத்தும் ஃபோனை பொருத்து விலை கூடுதலாக நிர்ணயம் செய்யப்படுவதாக வெளியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெருநகரங்களில் மக்கள் தினசரி போக்குவரத்து பயன்பாட்டிற்கு ஊபர், ஓலா போன்ற ஆன்லைன் செயலிகள் மூலம் டாக்ஸி புக் செய்வது அதிகமாக உள்ளது. இந்நிலையில் ஒரே இடத்திலிருந்து மற்றொரு ஒரே இடத்திற்கு செல்ல புக் செய்யும்போது, புக் செய்ய பயன்படுத்தும் ஃபோன் ஆண்ட்ராய்டு ஃபோனாக இருந்தாலும் கட்டணம் குறைவாகவும், ஐஃபோனாக இருந்தால் கட்டணம் அதிகமாகவும் காட்டுவதாக புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து ஆய்வு செய்ய சென்னையில் இருந்து 3 இடங்களுக்கு செல்ல செயலிகள் புக்கிங் செய்தபோது ஆண்ட்ராய்டு ஃபோன்களில் காட்டிய தொகையை விட ஐஃபோனில் சுமார் ரூ.50 முதல் ரூ.160 வரை அதிகமாக காட்டியதாக ஆங்கில நாளேடு ஒன்று தெரிவித்துள்ளது.
இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள ஊபர் நிறுவனம், பயணிகள் பயணிக்கும் தொலைவு, தேர்வு செய்யும் வாகனத்தை பொறுத்துதான் கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது, செல்போன்கள் அடிப்படையில் கட்டணம் நிர்ணயிக்கப்படுவதில்லை என கூறியுள்ளது.
Edit by Prasanth.K