உயிரியல் வகுப்பில் பசுவின் மூளையை கொண்டு வந்த ஆசிரியை: அதிரடி சஸ்பெண்ட் நடவடிக்கை!

Mahendran
சனி, 28 ஜூன் 2025 (12:17 IST)
தெலங்கானா மாநிலம் விகாராபாத் மாவட்டம் யலால் கிராமத்தில் உள்ள மாவட்ட பரிஷத் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில், உயிரியல் ஆசிரியை காசிம்பீ, வகுப்பறையில் பசுவின் மூளையை கொண்டு வந்து செயல் விளக்கம் அளித்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதால் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
 
இந்தச் சம்பவம் வலதுசாரி அமைப்புகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அவர்கள் பள்ளி முன் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறையினர் ஆசிரியை காசிம்பீ மீது தெலங்கானா பசுவதை தடை மற்றும் விலங்குகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
 
ஆசிரியை கொண்டு வந்தது பசுவின் மூளையா என்பதை தங்களால் சரிபார்க்க முடியவில்லை என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஆசிரியை தரப்பில் அது 'உபயோகமற்ற பொருள்' என்று கூறப்பட்டாலும், மாணவர்கள் அது பசுவின் மூளை என்று ஆசிரியை கூறியதாகவும், அதன் வாடை தங்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளனர்.
 
ஆசிரியை அந்த மூளையுடன் மாணவர்களுடன் நின்று புகைப்படம் எடுத்து, பள்ளியின் மெசேஜிங் குழுவில் பதிவிட்டதும் இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்தது. வலதுசாரி அமைப்புகள் அந்த புகைப்படங்களை ஏந்தி தீவிர போராட்டங்களில் ஈடுபட்டனர்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 மாதமாக மிரட்டி தொடர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்: ஈபிஎஸ் கண்டனம்..!

விஜய் கிரிக்கெட் பால் மாதிரி!.. அவருக்குதான் என் ஓட்டு!.. பப்லு பிரித்திவிராஜ் ராக்ஸ்!...

20 வருடங்களாக வைத்திருந்த உள்துறையை பாஜகவுக்கு தாரை வார்த்த நிதிஷ்குமார்.. என்ன காரணம்?

7ஆம் வகுப்பு மாணவி பள்ளி மாடியில் இருந்து விழுந்து உயிரிழப்பு: ஆசிரியர்கள் மீது பெற்றோர் குற்றச்சாட்டு

கோவை மெட்ரோ.. திருப்பி அனுப்பிய மத்திய அரசின் அறிக்கையில் 3 முக்கிய விளக்கம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments