ஏர் இந்தியா விமானம் செல்லும் வழியில் வெடித்து சிதறிய எரிமலை! மீண்டும் டெல்லிக்கு திரும்பியது!

Prasanth K
புதன், 18 ஜூன் 2025 (10:57 IST)

சமீபமாக அகமதாபாத் விபத்திற்கு பிறகு ஏர் இந்தியா விமான சேவைகள் ரத்தாகி வரும் நிலையில் இன்றும் பாலி சென்ற விமானம் திருப்பிவிடப்பட்டுள்ளது.

 

அகமதாபாத்தில் கடந்த 12ம் தேதி லண்டனுக்கு புறப்பட்ட விமானம் விபத்துக்குள்ளானதில் 241 பேர் பலியான சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து அனைத்து விமான நிலையங்களிலும் விமானம் புறப்படும் முன்னர் பரிசோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

 

இதனால் கடந்த சில நாட்களாக ஏர் இந்தியா விமானங்கள் கடைசி நேரக் கோளாறு, தொழில்நுட்ப கோளாறு காரணமாக திருப்பிவிடப்படுவது, ரத்து செய்யப்படுவது தொடர் கதையாகி வருகிறது.

 

இந்நிலையில் இன்று தலைநகர் டெல்லியில் இருந்து தீவு நாடான பாலிக்கு ஏர் இந்தியா விமானம் ஒன்று பயணிகளை ஏற்றிக் கொண்டு புறப்பட்டது. ஆனால் அப்பகுதியில் எரிமலை வெடித்துள்ளதால், மோசமான வானிலை சூழல் நிலவுகிறது. இதனால் புறப்பட்டு பாதி தூரம் பயணித்திருந்த விமானம் எச்சரிக்கப்பட்டு மீண்டும் டெல்லிக்கே திருப்பிவிடப்பட்டது. இதனால் பயணிகள் அவதியடைந்துள்ளனர்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவில் இருக்கும் சிக்கல்!.. சமாளிப்பாரா செங்கோட்டையன்!.. ஒரு பார்வை...

திருமணத்திற்கு மறுத்த ஆசிரியை வெட்டி கொலை.. சட்டம் - ஒழுங்கை காப்பாற்றுங்கள்: அன்புமணி கோரிக்கை

4 ஆண்டுகளாக பங்குச்சந்தையில் வர்த்தகம்.. ரூ.35 கோடி ஏமாந்த 72 வயது முதியவர்..!

'டிக்வா' புயல் எச்சரிக்கை: நாளை 4 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான 'ரெட் அலர்ட்'!

செங்கோட்டையனை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்: விஜய் வெளியிட்ட அறிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments