இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிக் கேப்டனாகவும், நட்சத்திர வீரராகவும் இருக்கிறார். இவரது டுவிட்டர் பக்கத்தில் இவரை 360 மில்லியனுக்கும் மேற்பட்ட ரசிகர்கள் உலகமெங்கிலும் இருந்து ஃபாலோ செய்கிறார்கள்.
இந்நிலையில் விராட் கொலி இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு அரை நிர்வாண போட்டோவை பதிவிட்டார். இதனைப் பார்த்த நெட்டிசன்ஸ் அவரை பயங்கரமாக கலாய்த்து பதிவிட்டு வருகின்றனர்.
அதில் முக்கியமாக, இந்தியாவில் அண்மையில் மோட்டார் வாகன சட்டத்தின் புதிய திருத்தத்தின்படி, ஓட்டுநர் லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டினால் ரூ. 5 ஆயிரம் அபராதம். குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் ரு, 10 ஆயிரம் அபராதம். ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டினால் ரூ. 1000 அபராதம் என உயர்த்தப்பட்டது.
எனவே வாகன ஓட்டினால் இவற்றில் எதாவது ஒன்றைத் தவறவிட்டாலும் கூட கடுமையாக அபராதம் போக்குவரத்து காவல்துறையினரால் வசூலிக்கப்படுகிறது. அண்மையில் கூட ஹரியானாவைச் சேர்ந்த ஒரு நபருக்கு 37 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது.
இப்படி அபராதம் வசூலிக்கப்பட்டால், சகலத்தையும் இழந்து, மக்கள் தெருவில் நிற்க வேண்டிய நிலை ஏற்படும் என விராட் கோலியின் இந்த அரை நிர்வாணப் புகைப்படம் குறித்து காட்டமாக நெட்டிசன்ஸ் கருத்து தெரிவித்துவருகின்றனர்.