Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மாணவியர் தலையில் இடிந்து விழுந்த மேற்கூரை ...பரவலாகும் வீடியோ

Advertiesment
மாணவியர் தலையில் இடிந்து விழுந்த மேற்கூரை ...பரவலாகும் வீடியோ
, வியாழன், 20 ஜூன் 2019 (14:34 IST)
மஹாராஷ்டிர மாநிலம் உல்காஸ் நகரில் ஆசிரியர் வகுப்பில் பாடம் நடத்திக்கொண்டிருந்த போது, மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் மூன்று மாணவியர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வகுப்பில் ஆசிரியர் வகுப்பு எடுத்துக் கொண்டிருக்கும் போது, மாணவியர் உன்னிப்பாக பாடத்தைக் கவனித்துக்கொண்டிருந்தனர். அங்கு மாணவிகள் டெஸ்க் முழுவதும்  அமர்ந்திருந்தனர்.
 
அப்போது மேற்கூரையில் இருந்து ஒரு சிமெண்ட் பகுதி திடீரென்று மாணவர்கள் மீது விழுந்தது. இதனால் மாணவர்களும் ஆசிரியரும் அதிர்ச்சி அடைந்தனர்.
 
இதில் பலத்த காயம் அடைந்த 3 மாணவர்களுக்கு பள்ளியில் முதல் உதவி அளிக்கப்பட்டு வீட்டுக்கு அனுப்பட்டதாகத் தகவல் வெளியாகிறது.
 
இந்தக் காட்சி வகுப்பில் மாட்டப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது இந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் பரவலாகி ஆகிவருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாபா ராம்தேவின் ‘பதஞ்சலி பசு நெய்க்கு’ இவ்ளோ கிராக்கியா ?