Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தெருவில் சென்றோரை முட்டித்தள்ளிய முரட்டு மாடு : பரவலாகும் வீடியோ

Advertiesment
viral video
, புதன், 19 ஜூன் 2019 (16:47 IST)
குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நேற்று மாலை நேரத்தில் ஒரு முதியவர் தன் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த ஒரு காளை மாடு முதியவரை கீழே தள்ளிவிட்டு முட்டியது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதனைத்தொடர்ந்து ஒரு இளைஞர்,ஒரு தொட்டியில் தண்ணீரை ஊற்றி காளையை குடிக்கச்செய்து அந்த முதியவரை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றார்.
 
ஆனால் காளை தன் ஆட்டத்தை விடுவதாக இல்லை. அடுத்து அந்த தெருவில் பைக்கில் வந்த ஒருவரையும் தள்ளிவிட்டு தன் கூர்மையாக கொம்புகளால் முட்டியது.
 
அதேபோல் அந்த தெருவில் வருவோர் எல்லோரையும் விரட்டி விரட்டி முட்டியது இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
 
இந்த வீடியோவை ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தன் டிவிட்டர் பக்கத்தில் இதை பதிவிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது பரவலாகிவருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தியேட்டரில் படம் பார்த்தவர் திடீர் மரணம்:நடந்தது என்ன?