Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துணைக் குடியரசுத் தலைவர்! முன்னாள் நீதிபதியை களமிறக்கிய இந்தியா கூட்டணி!

Prasanth K
செவ்வாய், 19 ஆகஸ்ட் 2025 (13:27 IST)

இந்திய துணைக் குடியரசுத் தலைவர் பதவிக்கு இந்தியா கூட்டணியில் இருந்து முன்னாள் நீதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

 

இந்திய துணைக் குடியரசு தலைவராக இருந்து வந்த ஜகதீப் தன்கர் தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில், துணைக் குடியரசுத் தலைவருக்கான தேர்தல் நாடாளுமன்றத்தில் நடைபெற உள்ளது. இதற்காக பாஜக சார்பில் தமிழகத்தை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் தமிழரான அவரை அனைத்துக் கட்சிகளும் பாரபட்சமின்றி ஆதரிக்க வேண்டும் என தமிழக பாஜக கேட்டுக் கொண்டது.

 

இந்நிலையில் எதிர்கட்சிகளான இந்தியா கூட்டணி சார்பாக நிறுத்தப்போகும் வேட்பாளர் யார் என்ற கேள்வி இருந்து வந்தது. இதுகுறித்து இந்தியா கூட்டணி கட்சிகள் ஆலோசனை நடத்தி வந்த நிலையில் தற்போது ஆந்திர பிரதேசத்தைச் சேர்ந்த முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி சுதர்சன் ரெட்டியை துணைக் குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவித்துள்ளனர்.

 

முன்னாள் நீதிபதியான சுதர்சன் ரெட்டி கோவாவில் லோக்ஆயுக்தாவில் அங்கம் வகித்தவர், பல முக்கிய சிவில் தீர்ப்புகளை வழங்கியவர். அவரது அனுபவமும், திறமையும் துணை ஜனாதிபதியாக செயல்பட தேவையானவை என இந்தியா கூட்டணியினர் கருத்து தெரிவித்துள்ளனர்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோயம்பேடு - பட்டாபிராம் மெட்ரோ வழித்தடம்: தமிழக அரசு நிதி ஒதுக்கீடு!

திமுக எம்பி டி.ஆர்.பாலு மனைவி ரேணுகா தேவி காலமானார்.. தலைவர்கள் இரங்கல்..!

பைக் ஓட்டிக்கொண்டே ரீல்ஸ் எடுத்த 17 வயது சிறுவன்.. விபத்து ஏற்பட்டு பரிதாப பலி..!

எடப்பாடி பழனிசாமி கூட்டத்திற்குள் புகுந்தது ஏன்? - ஆம்புலன்ஸ் டிரைவர் விளக்கம்!

இந்தியாவுக்கு உரங்கள், தாதுக்கள் மீண்டும் ஏற்றுமதி! கட்டுப்பாடுகளை தளர்த்திய சீனா!

அடுத்த கட்டுரையில்
Show comments