Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சட்டசபையில் வாஸ்து சரியில்லை – ஜெகன் மோகன் ரெட்டியை எச்சரிக்கும் வாஸ்து நிபுணர்

Advertiesment
சட்டசபையில் வாஸ்து சரியில்லை – ஜெகன் மோகன் ரெட்டியை எச்சரிக்கும் வாஸ்து நிபுணர்
, வெள்ளி, 7 ஜூன் 2019 (13:16 IST)
ஜெகன் மோகன் ரெட்டி ஆந்திர பிரதேசத்தின் புதிய முதலமைச்சராக பதவியேற்று சில நாட்களே ஆன நிலையில், ஆந்திர சட்டசபை கட்டிடத்தில் வாஸ்து சரியில்லை. இதனால் ஜெகன் மோகன் ரெட்டிக்கு பல கேடுகள் விளையலாம் என பிரபல வாஸ்து நிபுணர் எச்சரித்திருப்பது ஆந்திராவை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

ஆந்திராவில் பிரபலமான வாஸ்து நிபுணர் வாஸ்து புருஷ பிரசாத். இவர் சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் சந்திரபாபு நாயுடு தோல்வியுற்றது முதற்கொண்டு அனைத்துக்குமே வாஸ்துதான் காரணம் என கூறியுள்ளார். சந்திரபாபு நாயுடு வசிக்கும் வீடு முன்னர் பாம்புகள் குடியிருக்கும் பகுதியாக இருந்ததாகவும், வீட்டை விரிவாக்கம் செய்தபோது வாஸ்து பார்க்காமல் இஷ்டத்துக்கு கட்டிவிட்டதாகவும் அவர் கூறியிள்ளார். மேலும் சந்திரபாபு மற்றும் அவரின் கட்சி தலைவர்கள், கூட்டணி கட்சி தலைவர்கள் என அனைவருமே தேர்தலில் தோல்வியடைந்ததற்கு காரணம் சந்திரபாபு நாயுடுவின் வீட்டின் மோசமான வாஸ்துதான் என அவர் கூறியுள்ளார். சந்திரபாபு இங்கிருந்து குண்டூர் பக்கம் சென்றால் அவர் அரசியல் வாழ்க்கை நன்றாக இருக்கும். குண்டூர் வாஸ்துபடி அரசியலுக்கு நல்ல ஊர் என்றும் கூறியுள்ளார்.

தொடர்ந்து ஜெகன் மோகன் ரெட்டிக்கான வாஸ்து பற்றி பேசிய அவர் ‘ஜகன் மோகன் வீடு நல்ல வாஸ்துவிலேயே அமைந்துள்ளது. ஆனால் ஆந்திர சட்டசபையில் வாஸ்து ரீதியாக சில சிக்கல்கள் உள்ளன. அது ஜெகன் மோகன் ரெட்டிக்கு ஏதாவது கெடுதலை ஏற்படுத்தக்கூடும். சட்டமன்ற நுழைவுவாயில் ’விதிசூலம்’ இருக்கிறது. ஆனால் ஜெகன் மோகன் பதவியேற்கும்போது ஈசானிமூலை நோக்கிய திசை பார்த்தபடி இருந்தார். அங்கே கனக துர்கா தேவி அருள் பாலிப்பதால் அவருக்கு நன்மைகள் விளையும்’ என வாஸ்து புருஷ பிரசாத் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வாஸ்து புருஷ பிரசாத் ஜெகன் மோகன் ரெட்டியின் வாஸ்து ஆலோசகர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

யாருடைய நிலத்தையும் பிடுங்கி நாங்கள் சாலை அமைக்கவில்லை – முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி