Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

யாருடைய நிலத்தையும் பிடுங்கி நாங்கள் சாலை அமைக்கவில்லை – முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

Advertiesment
யாருடைய நிலத்தையும் பிடுங்கி நாங்கள் சாலை அமைக்கவில்லை – முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி
, வெள்ளி, 7 ஜூன் 2019 (12:49 IST)
சேலத்தில் கட்டப்பட்டுள்ள மேம்பாலங்களை திறந்து வைக்க இன்று சேலம் சென்றுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி. சேலத்தில் பெருகிவரும் போக்குவரத்து நெரிசல்களை தவிர்க்க தமிழக அரசு பல்வேறு பாலங்களை கட்டுவதற்கான நிதியை ஒதுக்கீடு செய்திருந்தது. அதன் பல்வேறு கட்ட பணிகள் முடிந்த நிலையில் ஒவ்வொரு பாலமாக திறந்து வைக்கப்பட உள்ளன.

தற்போது ஏவிஆர் ரவுண்டானாவில் இருந்து அஸ்தம்பட்டி வரையிலான மேம்பால பணிகள் முடிவடைந்துள்ளன. 2 கிமீ தொலைவிற்கு அமைக்கப்பட்டுள்ள இந்த மேம்பாலத்தால் நகருக்குள் கணிசமான அளவு போக்குவரத்து நெரிசல் குறையும் என நம்பப்படுகிறது. இந்த பாலத்தை திறந்து வைத்து எடப்பாடி பழனிசாமி பேசியதாவது “ மக்களின் பயண சுமையையும், போக்குவரத்து நெரிசலையும் தவிர்க்கவே பாலங்கள், சாலைகள் அமைக்கப்படுகின்றன. அதுபோலதான் பெருகிவரும் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு 8 வழிச்சாலை திட்டமும் தொடங்கப்பட்டது. மக்களுக்காகதான் 8 வழிசாலையே தவிர, தனிநபருக்காக அல்ல. நீதிமன்ற தீர்ப்பில் நேர்மறையான தீர்ப்பு வெளிவந்தவுடன் 8 வழி சாலை நிறைவேற்றப்படும். அதுபோல சேலம் அருகே பஸ் போர்ட் உருவாக்குவதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. மக்களிடம் இருந்து நிலங்களை பறித்து அவர்கள் மேல் 8 வழிச்சாலையை திணிக்க நாங்கள் நினைக்கவில்லை” என்று கூறியுள்ளார்.

இந்த மேம்பால திறப்பு விழாவில் முதல்வர், அதிமுக பிரமுகர்கள் மற்றும் சேலம் ஆட்சியர் ரோகிணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இரண்டரை வயது சிறுமி பலாத்காரம்? கண்களை தோண்டி எடுத்து சிதைத்த கொடூரர்கள்