இந்தியாவின் அதிவேக எக்ஸ்பிரஸ் ரயில் ஆன வந்தே பாரத் ரயில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் எருமை மாட்டின் மீது மோதியதால் விபத்துக்குள்ளானது என்றும் இதனை அடுத்து மாட்டின் உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின
மேலும் இந்த விபத்து காரணமாக வந்தே பாரத் ரயிலின் முன்பகுதி சேதமடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் குஜராத்தில் உள்ள ஆனந்த் ரயில் நிலையம் அருகே நேற்று பசு மாட்டின் மீது வந்தே பாரத் ரயில் மோதியதால் சிறிய அளவில் சேதம் அடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வந்தே பாரத்ரயில்கள் இயங்கும் பகுதியில் மாடுகள் மேய்ந்தால் மாடுகளின் உரிமையாளர்கள் தான் பொறுப்பு என்று ரயில்வே துறை எச்சரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.