Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

லாரியில் மோதி தீ பிடித்த பேருந்து.. உடல் கருகி இறந்த பயணிகள்! – நாசிக்கில் கோர விபத்து!

Advertiesment
accident
, சனி, 8 அக்டோபர் 2022 (09:52 IST)
மகாராஷ்டிராவில் நாசிக் அருகே பயணிகள் பேருந்து லாரியில் மோதி தீ பிடித்ததில் பலர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிராவில் நாசிக் அருகே பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்ற சுற்றுலா பேருந்து ஒன்று அதிகாலை 5 மணியளவில் அவுரங்காபாத் சாலையில் சென்று கொண்டிருந்தபோது லாரி மீது மோதி விபத்திற்கு உள்ளாகியுள்ளது.


இந்த விபத்தில் பேருந்து மோதிய வேகத்தில் தீ பற்றியுள்ளது. தீ வேகமாக பேருந்துக்குள்ளும் பரவி பற்றி எரிந்துள்ளது. இந்த கோர விபத்தில் பேருந்துக்குள் சிக்கிய ஒரு குழந்தை உட்பட 11 பேர் தீயில் கருகி உயிரிழந்துள்ளனர்.

தகவல் அறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இந்த விபத்தில் மேலும் 32 பேர் வரை காயமடைந்து சிகிச்சை பெற்றும் வரும் நிலையில் பலி எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகிறது.

Edited By: Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இனி திப்பு எக்ஸ்பிரஸ் இல்ல.. உடையார் எக்ஸ்பிரஸ்..! – ரயில் பெயர் மாற்றத்தால் சர்ச்சை!