Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அத்வானியால் எஸ்கேப் ஆன மோடி: வாஜ்பாய் ப்ளானே வேறு... யஷ்வந்த் சின்கா அதிரடி பேட்டி!

அத்வானியால் எஸ்கேப் ஆன மோடி: வாஜ்பாய் ப்ளானே வேறு... யஷ்வந்த் சின்கா அதிரடி பேட்டி!
, சனி, 11 மே 2019 (10:38 IST)
அத்வானி இல்லையென்றால் மோடியின் ஆட்சியை அன்றே கலைத்திருப்பார் வாஜ்பாய் என யஷ்வந்த் சின்கா பேட்டியளித்துள்ளார். 
 
குஜராத் வன்முறை 2002 என குறிப்பிடுவது இந்துக்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு இடையே 2002 ஆம் ஆண்டில் மூன்று மாதங்களுக்கு இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் நடந்த மதக்கலவரம் ஆகும். அப்போது குஜராத் முதல்வராக மோடி இருந்தார்.
 
இந்நிலையில் பாஜகவின் முன்னாள் மூத்த தலைவர் யஷ்வந்த் சின்கா சமீபத்தைய பேட்டியில் அதிரடி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் கூறியதாவது, குஜராத்தில் 2002 ஆம் ஆண்டு மதக்கலவரம் வெடித்தது. 
webdunia
அப்போது அந்த மாநிலத்தில் முதல் மந்திரியாக பதவி வகித்து வந்த மோடியை ராஜினாமா செய்ய கோர வேண்டும் என வாஜ்பாய் முடிவு செய்திருந்தார். இதற்காக கோவாவில் பாஜக தேசிய செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. 
 
ஒருவேளை மோடி ராஜினாமா செய்ய மறுத்தால் குஜராத் அரசு கலைக்கப்படும் என முடிவெடுத்திருந்தார் வாஜ்பாய். ஆனால் அப்போதைய உள்துறை அமைச்சராக இருந்த அத்வானி, குஜராத் அரசை கலைக்கும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். 
 
அதோடு மோடி அரசு கலைக்கப்பட்டால், நான் பதவியை ராஜினாமா செய்வேன் என்றும் கூறினார். இதனால், தனது முடிவை செயல்படுத்தாமல் வாஜ்பாய் நிறுத்திவிட்டார் என தெரிவித்தார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மத்திய சென்னை மக்களவை தேர்தல் 2019