Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அத்வானிக்கு ஏன் சீட் இல்லை ? – தமிழிசை பதில் !

Advertiesment
அத்வானிக்கு ஏன் சீட் இல்லை  ? – தமிழிசை பதில் !
, சனி, 23 மார்ச் 2019 (15:47 IST)
பாஜக முன்னணி தலைவர்களில் ஒருவரான அத்வானிக்கு இந்தமுறை பாஜகவில் சீட் கொடுக்காதது பலத்த சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.

கடந்த் 21 ஆம் தேதி  பாஜகவின் முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியானது. 20 மாநிலங்களில் போட்டியிடும் 184 வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. அதில் சில அதிரடி முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. பாஜகவின் மூத்த தலைவருமான எல்.கே.அத்வானி வழக்கமாகப் போட்டியிடும் குஜராத் காந்தி நகர் தொகுதியில் இம்முறை பாஜக தலைவர் அமித் ஷா போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் அத்வானிக்கு இந்த தேர்தலில் சீட் கிடைப்பதற்கான சாத்தியங்கள் இல்லை எனக் கூறப்பட்டது. இதற்குக் காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் 75 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குப் போட்டியிடும் வாய்ப்பு அளிக்கப்படாது பாஜக உயர்மட்டக் குழுவில் முடிவெடுக்கப்பட்டதாகச் கூறப்பட்டது. இது பாஜக கட்சிக்குள் சலசலப்புகளை ஏற்படுத்தியது. இதையடுத்து மோடி மற்றும் அமித் ஷா ஆகியோர் பாஜக முன்னனித் தலைவரை அவமதித்துவிட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இது குறித்து தமிழகப் பாஜக தலைவர் இப்போது விளக்கமளித்துள்ளார். தூத்துக்குடியில் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் தமிழ் பத்திரிக்கை ஒன்றுக்கு அளித்தப் பேட்டியில் அத்வானிக்கு சீட் கொடுக்கப்படாதது குறித்து பதில் அளித்துள்ளார். அதில் ‘அத்வானியே போட்டியிட வேண்டாம் என்று நினைத்திருக்கலாம். அதனால் கட்சி தலைமை இந்த முடிவை எடுத்து இருக்கலாம். 92 வயதில் அவரைத் தேர்தலுக்காக அவரை அலையவிடக் கூடாது என்ற நல்லெண்ணம்கூடக் காரணமாக இருக்கலாம். இனி போட்டியிட்டுத்தான் அத்வானி, தன்னுடைய செல்வாக்கை நிரூபிக்க வேண்டும் என்பதில்லை. ‘ எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

100 ஜிபி டேட்டா + ரூ.2,200 பணமும் வேண்டுமா..? இத பண்ணுங்க...