உத்தரகாண்ட் மாநில அமைச்சர் ஒருவருக்கும் அவரிடம் பணிபுரிந்த ஊழியர்கள் மற்றும் குடும்பத்தினர் என மொத்தம் 22 பேர்களுக்கும் கொரோனா தொற்று பரவியுள்ளதால் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் மிக வேகமாக கொரோனா வைரஸ் பரவி நாளுக்கு நாள் அச்சுறுதி வரும் நிலையில் உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அமைச்சர் ஒருவருக்கு திடீரென கொரனா வைரஸ் அறிகுறி இருந்தது. இதனை அடுத்து அவருக்கு பரிசோதனை செய்தபோது கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது
இதனை அடுத்து அவரிடம் பணிபுரிபவர்கள் அவரது குடும்பத்தினர் என அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ததில் மொத்தம் 22 பேருக்கு பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிலையில் அமைச்சர் மற்றும் அவருடன் பாதிக்கப்பட்ட 22 பேர்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மாநில அமைச்சர் ஒருவருக்கே கொரோனா உறுதி செய்து பற்றி செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது