Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

முடிவுக்கு வராத சிலைப்போர்: உபியில் அம்பேத்கார் சிலை சேதம்

Advertiesment
முடிவுக்கு வராத சிலைப்போர்: உபியில் அம்பேத்கார் சிலை சேதம்
, சனி, 10 மார்ச் 2018 (13:17 IST)
சமீபத்தில் நடந்த திரிபுரா சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்ததும் அவர்கள் செய்த முதல் வேலை அங்கிருந்த லெனின் சிலையை உடைத்ததுதான். இந்த நிலையில் எச்.ராஜாவின் சர்ச்சைக்குரிய ஃபேஸ்புக் பதிவால் தமிழகத்தில் பெரியார் சிலைகள் சேதப்படுத்தப்பட்டன

இந்த நிலையில் இந்த சிலைபோர் நாடு முழுவதிலும் பரவியது. உத்தப்பிரதேசத்தில் அம்பேத்கர் சிலை, கொல்கத்தாவில் பாஜகவின் தாய் அமைப்பான ஜனசங்க நிறுவனர் சியாமா பிரசாத் முகர்ஜி, கேரளாவில் காந்தி சிலை என ஆங்காங்கே சிலைகள் சேதப்படுத்தப்பட்டு சிலைப்போர் நடந்தது.

இந்த நிலையில் இன்று மீண்டும் உத்தரபிரதேச மாநிலத்தில் அம்பேத்கரின் சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளது. உபி மாநிலத்தில் உள்ள அஸம்கார் என்ற பகுதியில் உள்ள அம்பேத்கரின் முழு உருவ சிலையின் தலைப்பகுதியை சில மர்ம நபர்கள் சேதப்படுத்தியுள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பகுதி மக்கள் ஆத்திரத்தில் உள்ளதால் அந்த பகுதியில் முழுவதும் போலீஸ் குவிக்கப்பட்டு பதட்டத்தை தணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

நாட்டில் தீர்க்க வேண்டிய எத்தனையோ பிரச்சனைகள் இருக்கும்போது சிலை உடைப்பு போரிலிருந்து மக்கள் வெளியே வரவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வாடிக்கையாளர் பணத்தை திருடிய ஏர்டெலுக்கு ரூ.5 கோடி அபராதம்