உத்தரகண்ட் மாநில காவல்துறை, 'ஆபரேஷன் கலாநெமி' என்ற பெயரில் போலி சாமியார்களை கைது செய்யும் நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளது. இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் உட்பட 14 போலி சாமியார்கள் என்பது தெரிய வந்ததை அடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உத்தரகண்ட் மாநிலத்தில் பொதுமக்களை ஏமாற்றும் போலி சாமியார்களை கண்டறிந்து கைது செய்யும் நடவடிக்கை சட்ட ஒழுங்கு காவல்துறை ஐ.ஜி. நீலேஷ் ஆனந்த் பரானேவின் மேற்பார்வையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதுவரை, சுமார் 5,500 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இதில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 1,182 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போலி சாமியார்கள் வேடத்தில் வங்கதேசத்தை சேர்ந்தவர்களும் ஊடுருவி வருகின்றனர். சமீபத்திய கைது நடவடிக்கையில், இதுபோன்ற நபர்களும் சிக்கியுள்ளனர். இது தேசிய பாதுகாப்பு தொடர்பான கவலையையும் எழுப்பியுள்ளது.