ஹரியானா மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில், சுமார் 300 புதிய மாருதி சுசூகி கார்கள் மூழ்கியுள்ளன. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஹரியானாவில் கடந்த ஏழு நாட்களாக கனமழை பெய்ததால் அங்கு ஏற்பட்ட வெள்ளத்தில் மாருதி சுசுகி குடோன் மூழ்கியது. இதனால் அங்கிருந்த 200க்கும் மேற்பட்ட கார்களின் என்ஜின்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வெள்ள நீர் என்ஜினுக்குள் புகுந்ததால், இந்த கார்கள் மீண்டும் இயங்குவது சாத்தியமில்லை என தெரிகிறது.
கார்களின் ஓட்டுநர் இருக்கை அருகே உள்ள கண்ணாடிகள் அகற்றப்பட்டிருப்பதும், சில கார்களில் ஏர்பேக்குகள் திறந்திருப்பதும் காணொளியில் பதிவாகியுள்ளது. இந்த வாகனங்களில் ஆல்டோ கே10, வாகனார், பிரெஸ்ஸா, இன்விக்டோ போன்ற பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள கார்களும் அடங்கும்.
இந்த வெள்ளத்தால் ஏற்பட்ட மொத்த சேத மதிப்பு இன்னும் கணக்கிடப்படவில்லை. எனினும், கோடிக்கணக்கில் இருக்கும் என கூறப்படுகிறது.