வரலாற்றுத் தவறை உணர்ந்து முஸ்லிம்கள் கியான்வாபியை இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வாரணாசியில் உள்ள காசி விசுவநாதர் கோயில் வளாகத்தை ஒட்டி உள்ள கியான் பாபி மசூதி அவுரங்கசீப் மன்னரால் இடிக்கப்பட்டு மசூதியாக கட்டப்பட்டுள்ளதாக புகார் அளித்துள்ளது
இதனால் இந்த மசூதியை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என இந்துக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் இதுகுறித்து உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறிய போது கியான் பாபியை நாம் மசூதி என்று அழைத்தால் அது விவாதத்திற்கு உரியதாகிவிடும்.
மசூதிக்குள் திரிசூலங்களுக்கு என்ன வேலை? எனவே வரலாற்று தவறை உணர்ந்து முஸ்லிம்கள் கியான் பாபி மசூதியை இந்துக்களிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.