Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அயோத்தி ராமர் கோவிலை தகர்த்து மீண்டும் மசூதி கட்டப்படும்: அல்-கொய்தா சூளுரை

Advertiesment
Ramar Temple
, ஞாயிறு, 8 ஜனவரி 2023 (14:30 IST)
அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலை இடித்துவிட்டு அந்த இடத்தில் மீண்டும் மசூதி கட்டப்படும் என அல்கொய்தா இயக்கம் தெரிவித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது 
 
அயோத்தி ராமர் கோவில் குறித்த வழக்கின் விசாரணை முடிவடைந்து தற்போது அந்த இடத்தில் ராமர் கோவில் கட்டப்பட்டு முடிந்து உள்ளது என்றும் விரைவில் இந்த ராமர் கோயில் பக்தர்களுக்காக திறக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் அல்கொய்தாவின் பத்திரிகையில் வெளியான செய்தியில், ‘அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோவிலை இடித்துவிட்டு அந்த இடத்தில் மீண்டும் மசூதி கட்டப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்திய முஸ்லிம்கள் இந்த புனிதப் போருக்கு ஆதரவளிக்க வேண்டும் என்றும் அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
 
மேலும் இந்து முஸ்லிம் ஒற்றுமை கோஷம் ஏளனத்திற்குரிய ஒரு கேலி நாடகம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த இந்திய துணைக்கண்டம் இஸ்லாமிய அரசின் ஒரு பகுதியாக மாறும் என்றும் சிலைவழிபாடு ஒழிக்கப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு- வானிலை மையம்