Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கட்ட முடியாத கடன்.. ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் திவாலானது!

Advertiesment
Hero Electric

Prasanth Karthick

, ஞாயிறு, 2 மார்ச் 2025 (18:10 IST)

இந்தியாவின் பிரபலமான வாகன  நிறுவனமான ஹீரோ எலெக்ட்ரிக் வாகன நிறுவனம் கடன் பிரச்சினையால் திவாலானதாக அறிவிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்கள் உற்பத்தி அரசால் ஊக்குவிக்கப்பட்ட நிலையில் மக்கள் பயன்பாட்டிற்காக இ-ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்திய முதல் நிறுவனம் ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம். பல மாடல்களில் ஹீரோ வெளியிட்ட இ-ஸ்கூட்டர்களுக்கு மக்களிடையே வரவேற்பு கிடைத்த நிலையில் கடந்த 2023ம் ஆண்டில் மட்டும் 1 லட்சம் யூனிட் இ-ஸ்கூட்டர்களை விற்பனை செய்தது ஹீரோ.

 

ஆனால் கடந்த ஆண்டில் ஹீரோ இ-ஸ்கூட்டர்கள் எதிர்பார்த்த விற்பனை இலக்கை எட்டாமல் வெறும் 11 ஆயிரம் யூனிட்களுக்குள் சுருண்டுள்ளது. இதனால் வங்கிகளில் வாங்கிய கடனை அடைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதை தொடர்ந்து கடந்த டிசம்பர் மாதம் இந்நிறுவனம் மீதான திவால் நடவடிக்கை தொடங்கிய நிலையில் தற்போது இந்நிறுவனம் திவாலானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இணையதளத்திலும் இந்த நிறுவனத்தின் வலைதளம் மூடப்பட்டுள்ளது.

 

பேங்க் ஆஃப் பரோடா, கோடக் மஹிந்திரா உள்ளிட்ட வங்கிகளில் ரூ.82 கோடி வரை ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் கடன் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இனி ஆங்கிலம் மட்டும்தான் அமெரிக்காவின் மொழி! - ட்ரம்ப் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!