ஆந்திர மாநிலத்தில் பிச்சைக்காரரிடம் கடன் வாங்கிய தொழிலதிபர் ஒருவர் தான் கடன் வாங்கிய அனைவருக்கும் திவால் நோட்டீஸ் அனுப்பி உள்ள நிலையில் பிச்சைக்காரருக்கும் அனுப்பி உள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலத்தில் உள்ள சாய்பாபா கோவில் முன்பு அசோக் என்பவர் தனது மனைவியுடன் பிச்சை எடுக்கும் நிலையில் அவரது மகளின் படிப்பு மற்றும் திருமணத்திற்காக 50 ஆயிரம் ரூபாய் சேமித்து வைத்திருந்தார்.
இந்த நிலையில் ஹோட்டல் நடத்தி வரும் தொழிலதிபர் நரசிம்மராவ் என்பவர் சமீபத்தில் அசோக் இடம் தனக்கு அவசரமாக 50 ஆயிரம் ரூபாய் தேவை என்றும் கடன் கொடுத்தால் வட்டியுடன் திருப்பி தருகிறேன் என்று கூறியுள்ளார்.
இதனை நம்பியாக அசோக், ஹோட்டல் தொழில் அதிபர் இடம் 50,000 கொடுத்துள்ளார். ஆனால் திடீரென நரசிம்ம ராவ் தனக்கு 2.75 கோடி கடன் இருப்பதாகவும் தொழில் நஷ்டம் ஏற்படுத்தாதால் ஏற்பட்டதால் அதை திருப்பி தர முடியாது என்றும் வக்கீல் மூலம் அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அந்த திவால் நோட்டீஸ் பிச்சைக்காரர் அசோக்கிற்கும் அனுப்பப்பட்ட நிலையில் அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார். தனது மகளின் எதிர்காலத்திற்காக சிறுக சிறுக சேர்த்து வைத்த பணம் இப்படி போய்விட்டதே என அவர் புலம்பி வருவதாக கூறப்படுகிறது