Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீதிமன்றத்தால் முடக்கப்பட்ட வங்கி கணக்குகளை விடுவித்து மோசடி.. 2 பேடிஎம் ஊழியர்கள் கைது..!

Mahendran
புதன், 16 ஜூலை 2025 (12:12 IST)
நீதிமன்றத்தால் முடக்கப்பட்ட வங்கி கணக்குகளை விடுவித்து, அதன் மூலம் ₹30 லட்சம் மோசடி செய்த பேடிஎம் ஊழியர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளன. 
 
கைது செய்யப்பட்டவர்கள் சந்திரேஷ் ரத்தோர் மற்றும் தாரிக் அன்வர் ஆவர். இவர்கள் புலனாய்வு அமைப்புகள் மற்றும் நீதிமன்றத்தால் முடக்கப்பட்ட கணக்குகளில் இருந்து ₹30 லட்சத்தை விடுவித்துள்ளனர். இது குறித்து கடந்த சில மாதங்களுக்கு முன்பே பேடிஎம்  புகார் அளித்த நிலையில், அந்த புகாரில் "தங்கள் நிறுவனத்தின் ஊழியர்கள் தங்கள் பதவியை தவறாக பயன்படுத்தி, புலனாய்வு நிறுவனங்களால் முடக்கப்பட்ட கணக்குகளை விடுவித்து ஆதாயம் பெற்றுள்ளனர்" என்று புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த இருவரும் ஒரு இடைத்தரகருடன் கூட்டணி சேர்ந்து, முடக்கப்பட்ட வங்கிக் கணக்கு உரிமையாளர்களையும் திட்டமிட்டு அணுகி, "உங்கள் கணக்கை விடுவிக்க பணம் தர வேண்டும்" என்று டீல் பேசியுள்ளனர். இதன் மூலம் சுமார் ₹30 லட்சம் ரூபாய் இருவரும் மோசடி செய்துள்ளதாகக் கூறப்பட்ட நிலையில், இருவரையும் காவல் துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். 
 
இந்த மோசடியில் மேலும் சில நிறுவன ஊழியர்கள் ஈடுபட்டிருக்கலாம் என்று கூறப்படுவதை அடுத்து, விசாரணை தீவிரமாக நடந்து வருவதாக கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிஜிட்டல் அரெஸ்ட் என மிரட்டி ரூ.11 லட்சம் மோசடி.. விரக்தியில் ஐடி ஊழியர் தற்கொலை..!

எம்ஜிஆர் பெயரில் புதிய கட்சி!? விஜய்யுடன் கூட்டணி? - ஓபிஎஸ் தர்மயுத்தம் 2.0!?

இன்று மீண்டும் சரிந்தது பங்குச்சந்தை.. முதலீடு செய்ய சரியான நேரமா?

ரூ.73000க்கும் குறைந்தது தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் இவ்வளவு சரிவா?

ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும்: பாமக தலைவர் அன்புமணி அதிரடி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments