Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பதற்றத்தைத் தணிக்கும் வகையில் செயல்படுங்கள் – இம்ரான் கானுடன் மோடி பேச்சு !

பதற்றத்தைத் தணிக்கும் வகையில் செயல்படுங்கள் – இம்ரான் கானுடன் மோடி பேச்சு !
, செவ்வாய், 20 ஆகஸ்ட் 2019 (14:06 IST)
காஷ்மீர் விவகாரத்தில் பதட்டத்தைத் தணிக்கும் வகையில் செயல்படுங்கள் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிடம் அமெரிக்க அதிபர் பேசியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை நீக்கி இந்தியா கடந்த ஆகஸ்ட் 2 ஆம் தேதி மசோதா தாக்கல் செய்து நிறைவேற்றியது. இதற்கு சர்வதேச அளவில் பாகிஸ்தான் மற்றும் சீனா தவிர அனைத்து நாடுகளும் ஆதரவு தெரிவித்தன. இதனால் இந்த விஷயத்தை இரு நாட்டு விவகாரமாகப் பேசித் தீர்த்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தொடர்ந்து இந்தியாவுக்கு எதிராக தனது கருத்துகளை முன்வைத்துள்ளார்.

இந்த சூழலில் ட்ரம்ப்புடன் இந்திய பிரதமர் மோடி தொலைபேசியில் நேற்று பேசியுள்ளார். இந்த சந்திப்பில் காஷ்மீர் விவகாரம் தொடர்பாகப் பேசியதாக தெரிகிறது. இந்த தகவலைப் பிரதமர் அலுவலகமும் உறுதி செய்துள்ளது. இதையடுத்து இன்று டிரம்ப் தொலைபேசி மூலம் பாகிஸ்தான் பிரதம்ர் இம்ரான் கானிடம் பேசியுள்ளார்.

அந்த உரையாடலின் போது இம்ரான் கானிடம் காஷ்மீர் விவகாரத்தில் பதற்றத்தைத் தணிக்கும் வகையில் செயல்படுங்கள், தேவையற்ற வார்த்தைகளை பிரயோகிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தியதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விலை குறைந்தது ரெட்மி ஸ்மார்ட்போன்(ஸ்): எவ்வளவு தெரியுமா?