நேற்று இந்திய பிரதமர் மோடியும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பும் நேற்று தொலைபேசியில் 30 நிமிடம் உரையாடியுள்ளனர்.
காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை நீக்கி இந்தியா கடந்த ஆகஸ்ட் 2 ஆம் தேதி மசோதா தாக்கல் செய்து நிறைவேற்றியது. இதற்கு சர்வதேச அளவில் பாகிஸ்தான் மற்றும் சீனா தவிர அனைத்து நாடுகளும் ஆதரவு தெரிவித்தன. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தொடர்ந்து இந்தியாவுக்கு எதிராக தனது கருத்துகளை முன்வைத்துள்ளார்.
இந்த சூழலில் ட்ரம்ப்புடன் இந்திய பிரதமர் மோடி தொலைபேசியில் நேற்று பேசியுள்ளார். இந்த சந்திப்பில் காஷ்மீர் விவகாரம் தொடர்பாகப் பேசியதாக தெரிகிறது. இந்த உரையாடல் குறித்து பிரதமரின் டிவிட்டர் பக்கத்தில் ’ இரு நாடுகளுக்கிடையிலான உறவுகளை வலுப்படுத்துவது மற்றும் நல்லுறவு குறித்தும் உரையாடலில் பேசப்பட்டது. வறுமை, கல்வியறிவின்மை மற்றும் நோய்களை எதிர்த்து ஒரே பாதையில் பயணிக்க இந்தியாவின் உறுதியாக இருக்கும் என்று தெரிவித்த பிரதமர், தொடர்பில் இருக்க வேண்டுமென ட்ரம்ப்பிடம் வலியுறுத்தியுள்ளார்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.