அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தான் உலகெங்கிலும் ஐந்து போர்களை நிறுத்தியுள்ளதாகப் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். தனது சமூக வலைத்தளத்தில் இது குறித்துப் பதிவிட்ட அவர், பல மோதல்களை முடிவுக்கு கொண்டுவந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
அணு ஆயுத போராக மாறியிருக்கக்கூடிய இந்தியா-பாகிஸ்தான் இடையேயான மோதல் உட்பட, பல போர்களை தானே தலையிட்டு நிறுத்தியதாக அவர் கூறியுள்ளார்.
31 ஆண்டுகளாக நீடித்த காங்கோ - ருவாண்டா இடையேயான போரையும் நிறுத்தியதாக குறிப்பிட்ட டிரம்ப், இந்தப் போரில் 70 லட்சம் பேர் பலியாகியிருந்தனர் என்று சுட்டிக்காட்டினார்.
போரை நிறுத்துவதற்காக, சம்பந்தப்பட்ட நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தங்களை நிறுத்திவிடுவேன் என்று மிரட்டியதன் மூலமே, போர்களை முடிவுக்கு கொண்டு வந்ததாக டிரம்ப் விளக்கமளித்துள்ளார். இந்த நடவடிக்கைகள் மூலம், லட்சக்கணக்கான உயிர்களை காப்பாற்றியுள்ளதாகவும் அவர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
"போரிட விரும்பினால் நீங்கள் சண்டையிட்டுக் கொள்ளுங்கள். ஆனால், நாங்கள் உங்களுடன் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ள மாட்டோம் என்று நான் சொன்னேன். உடனடியாக, அனைவரும் போரை நிறுத்திவிட்டார்கள்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.