Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விமான நிலையத்தில் அல்பமாக திருடிய ட்ரம்ப் முன்னாள் பார்ட்னர் – இதுதான் காரணமா?

Advertiesment
விமான நிலையத்தில் அல்பமாக திருடிய ட்ரம்ப் முன்னாள் பார்ட்னர் – இதுதான் காரணமா?
, செவ்வாய், 27 ஆகஸ்ட் 2019 (16:31 IST)
அமெரிக்க அதிபர் ட்ரம்பின் முன்னாள் தொழில் பார்ட்னர் ஒருவர் விமான நிலையத்தில் சில்லறை திருட்டுகளில் ஈடுப்பட்டதற்காக பிடிபட்டார்.

இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் தினேஷ் சாவ்லா. அவர் அமெரிக்காவில் மிஸிசிப்பி பகுதிகளில் ஹோட்டல் தொழிலில் மிகப்பெரியப் புள்ளி. மேலும் ட்ரம்ப் அதிபராவதற்கு முன்பிலிருந்தே அவர் நிறுவனத்தோடு வர்த்தக பார்ட்னராக இருந்து வந்திருக்கிறார்.

சமீபத்தில் ஒரு அவசர வேலையாக வெளியூர் செல்ல மெம்பிஸ் விமான நிலையம் சென்றிருக்கிறார் தினேஷ் சாவ்லா. அப்போது அங்கிருந்த வேறொரு நபரின் சூட்கேஸை தூக்கிக் கொண்டு யாரும் கவனிப்பதற்குள் விமானத்தில் எஸ்கேப் ஆகிவிட்டார். பிறகு சில நாட்கள் கழித்து பணிகள் முடிந்து மீண்டும் மெம்பிஸ் விமான நிலையம் திரும்பியவரை போலீஸார் கைது செய்தனர். அவர் திருடிய சூட்கேஸில் இருந்த பொருட்களின் மதிப்பு 1000 முதல் 2500 டாலர் வரை இருக்கலாம் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த செய்தி வெளியானதும் பலரும் அதிர்ச்சியடைந்தார்கள். ஒரு மிகப்பெரிய பணக்காரர் எதற்காக இப்படி அல்பமாக திருடினார் என்ற கேள்வி எழுந்தது. போலீஸாரிடம் திருடியது குறித்து பேசிய தினேஷ் சாவ்லா இவ்வாறு பொருட்களை எடுத்து செல்வது தவறு என்பது தனக்கு தெரியும். ஆனால் ஒரு த்ரில்லிங் அனுபவத்திற்காக மட்டுமே அப்படி செய்ததாகவும் கூறியுள்ளார். மேலும் பல நாட்களாக இதுபோல சிறிய அளவில் திருடி வந்துள்ளதாகவும் அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நைட்டு கம்பெனி தரியா... உதார் பேர்வழியை கும்மி எடுத்த பெண்கள்!