கோல்ப் விளையாடிய போது குறுக்கே புகுந்த முதலை – வைரல் வீடியோ

திங்கள், 26 ஆகஸ்ட் 2019 (19:09 IST)
அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் முதலைகளின் நடமாட்டம் அதிகமாக தொடங்கிவிட்டது. மேலும் அவை மனிதர்கள் நடமாடும் பகுதிகளில் சர்வ சாதரணமாக நடமாடி வருகின்றன.

ஃப்ளோரிடாவில் உள்ள கோல்ப் மைதானம் ஒன்றில் இளைஞர் ஒருவர் கோல்ப் விளையாடி கொண்டிருந்திருக்கிறார். அப்போது அந்த வழியாக வந்த 7 அடி நீள முதலை ஒன்று அவரை கண்டும் காணாமல் போய்க் கொண்டிருந்திருக்கிறது. அதை பார்த்த அவர் எப்போதும் போல கோல்ப் விளையாடியிருக்கிறார். பந்து முதலையின் தலைக்கு மேல் பறந்து போன போதும், அவர் முதலைக்கு அருகே நின்றபோது அது அவரை தாக்க முயற்சிக்கவே இல்லை.

இதற்கு முன்னர் இதே போல ஒரு மழை நேரத்தில் ராட்சத முதலை ஒன்று கோல்ப் மைதானத்தை கடந்து போனது, வேலியை தாண்டியது, நீச்சல் குளத்தில் மிதந்தது என பல வீடியோக்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

Golfing in Florida is just different...

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் டிரம்ப் - நரேந்திர மோதி சந்திப்பு: ‘எங்களின் பிரச்சனைகளை நாங்களே தீர்த்துக்கொள்வோம்’