Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரொம்ப காமெடியா பேசறீங்க போங்க! – மோடி-ட்ரம்ப் கலகல சந்திப்பு

ரொம்ப காமெடியா பேசறீங்க போங்க! – மோடி-ட்ரம்ப் கலகல சந்திப்பு
, திங்கள், 26 ஆகஸ்ட் 2019 (18:14 IST)
பிரான்ஸில் நடைபெற்று வரும் ஜி7 மாநாட்டில் சந்தித்து கொண்ட பிரதமர் மோடியும், அமெரிக்க அதிபர் ட்ரம்பும் நகைச்சுவையாக பேசிக்கொள்ளும் வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது.

வல்லரசு நாடுகளின் ஜி7 மாநாடு பிரான்ஸில் நடைபெற்று வருகிறது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உட்பட வல்லரசு நாடுகளின் அதிபர்கள், பிரதமர்கள் கலந்து கொள்ளும் இந்த சந்திப்பில் இந்திய பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளார்.

அங்கு சென்ற மோடி இயற்கை பாதுகாப்பு, புவி வெப்பமடைதல் ஆகியவற்றை குறித்து பேசியுள்ளார். மேலும் சுற்றுசூழலை பாதுகாக்க இந்தியாவில் பிளாஸ்டிக் ஒழிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது குறித்தும் பேசினார். நிகழ்வின் ஒரு பகுதியாக இன்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை சந்தித்தார் பிரதமர் மோடி.

காஷ்மீர் விவகாரத்தில் ட்ரம்ப் மத்தியஸ்தம் செய்ய தயாராக இருந்த நிலையில் இது இந்தியா-பாகிஸ்தான் உள்விவகாரம். இதில் மற்ற நாடுகள் தலையிட தேவையில்லை என கூறியவர் மோடி. இந்நிலையில் இருவரின் சந்திப்பு மிகவும் எதிர்பார்க்கப்பட்டது. கொரிய அதிபருடனான ட்ரம்ப்பின் சந்திப்பு போல இது காரசாரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர்களோ கூலாக பலநாள் நண்பர்கள் சந்தித்து கொண்டது போல பேசி கொண்டார்கள்.

அப்போது பத்திரிக்கைகளுக்கு இருவரும் பேட்டியளித்தனர். பத்திரிக்கையாளர்களின் கேள்விக்கு மோடி இந்தியிலேயே பதிலளித்தார். அப்போது ட்ரம்ப் “இவர் நன்றாக ஆங்கிலம் பேசுவார். ஆனால் இன்று ஆங்கிலம் பேச பிடிக்கவில்லை போல.. இந்தியில் பேசுகிறார்” என நகைச்சுவையாக கூறினார். உடனே இருவரும் கையை கோர்த்து கொண்டனர். “ரொம்ப காமெடியா பேசறீங்க போங்க” என்பது போல் ட்ரம்ப் கையில் விளையாட்டாக தட்டினார் மோடி.

இந்த கலகலப்பான உரையாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அமேசான் காடுகளை பாதுகாக்க.... ’ பிரபல நடிகர் ’ 50 லட்சம் டாலர்' நன்கொடை