திரிணாமுல் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை: வருடத்திற்கு 5 லட்சம் வேலைவாய்ப்புகள்!

Webdunia
புதன், 17 மார்ச் 2021 (18:51 IST)
தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் தேர்தல் தேதி சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அனைத்து மாநிலங்களிலும் அரசியல் கட்சிகள் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன,. அந்த வகையில் தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் ஒன்று மேற்குவங்கம் என்பது குறிப்பிடத்தக்கது 
 
மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மற்றும் பாஜக ஆகிய இரண்டு கட்சிகளும் நேருக்கு நேர் மோதி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மேற்கு வங்கத்தில் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது
 
இன்று கொல்கத்தாவில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை முதல்வர் மம்தா பானர்ஜி வெளியிட்டார். ஏழைகள் மற்றும் கணவனை இழந்த பெண்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும் என்றும் ஒரு வருடத்தில் ஐந்து லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் இலவச ரேஷன் பொருட்கள் வீட்டுக்கே வந்து வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
கவர்ச்சிகரமான பல திட்டங்கள் இந்த தேர்தல் அறிக்கையில் இருப்பதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஷேக் ஹசீனாவுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனை தீர்ப்புக்கு எதிர்ப்பு.. கலவரத்தில் 2 பேர் பலி..!

போதைபொருட்களுடன் வந்த பாகிஸ்தான் 255 ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது: BSF தகவல்..!

கனமழை எச்சரிக்கை எதிரொலி: ஒத்தி வைக்கப்பட்ட தேர்வுகள் குறித்த தகவல்..!

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி.. சென்னையில் ஒரு வாரம் சிறப்பு முகாம்..!

வாட்ஸ் அப் போல் மெசேஜ் அனுப்பலாம்.. வாய்ஸ், வீடியோகால் பேசலாம்.. எக்ஸ் தளத்தின் புதிய வசதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments