பேஸ்புக், வாட்ஸப் தடை? மத்திய அரசிடம் வணிகர் சங்கம் கோரிக்கை!

Webdunia
திங்கள், 11 ஜனவரி 2021 (08:34 IST)
வாட்ஸப் செயலி அறிவித்துள்ள புதிய நிபந்தனைகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் அதை தடை செய்ய கோரி வணிகர் சங்கம் மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.

இந்தியா முழுவதும் வாட்ஸப் செயலி தகவல் பரிமாற்றத்திற்கு அதிகமாக பயன்படுத்தப்படும் நிலையில் பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்கள், பரிவர்த்தனை விவரங்கள் உள்ளிட்ட பலவற்றை கண்காணிக்கும் வகையில் வாட்ஸ் அப்பில் புதிய நிபந்தனைகள் அறிவிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதை ஏற்றுக்கொள்ளாவிட்டால் வாட்ஸப்பை பயன்படுத்த முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு எதிராக பலரும் பேசி வரும் நிலையில் அகில இந்திய வணிகர் சங்க கூட்டமைப்பு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது. அதில் தனிநபர் சுதந்திரத்தை பாதிக்கும் வகையில் உள்ள வாட்ஸப்பின் புதிய கொள்கைகளை தடை செய்ய வேண்டும் அல்லது வாட்ஸப்பையும், அதன் தாய் நிறுவனமான பேஸ்புக்கையும் இந்தியாவில் தடை செய்ய வேண்டும் என வணிகர் சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கடந்த ஆண்டை விட கிட்டத்தட்ட இருமடங்கு உயர்வு.. தீபாவளி டாஸ்மாக் விற்பனை எத்தனை கோடி?

என் தந்தை என் மனைவியை திருமணம் செய்து கொண்டார்.. மரணத்திற்கு முன் இளைஞர் வெளியிட்ட வீடியோவால் அதிர்ச்சி..!

சொந்த கட்சி வேட்பாளருக்கு எதிராக பிரச்சாரம் செய்யும் தேஜஸ்வி யாதவ்! என்ன காரணம்?

வங்கக்கடலில் புயல் உருவாகுமா? வானிலை ஆய்வு மையத் தலைவர் அமுதா சொன்ன அப்டேட்

தீபாவளி முகூர்த்த பங்குச்சந்தை வர்த்தகம்.. சென்செக்ஸ், நிஃப்டியில் ஏற்றமா?

அடுத்த கட்டுரையில்
Show comments