கோவையில் உள்ள காந்திநகர் பகுதியைச் சேர்ந்தார் அனுஷியா(28). இவர் தனது கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்படவே அவரை விவாகரத்து பெற்று தனியே வாழ்ந்து வந்துள்ளார்.
இந்நிலையில், அவருக்கு ஃபேஸ்புக் மூலம் சிவகாசியைச் சேர்ந்த மாரிச் செல்வம்(25) என்ற இளைஞர் பழக்கமாகியுள்ளார்.
இருவரும் இணைந்து திருமணம் செய்து கொண்டு கோயமுத்தூரில் ஒன்றாக வசித்து வந்துனர்.
சமீபத்தில் அனுஷியாக் ரூ.1 லட்சம் மதிப்புள்ள ஒரு பைக்கை வாங்கிக்கொடுத்துள்ளார். இந்நிலையில் மாரி செல்வம் வேறு ஒரு பெண்ணுடன் பழகி வந்துள்ளார். பின்னர் அவரையே இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டு வேதாரண்யத்தில் வசித்து வந்துள்ளார்.
சிலநாட்கள் கழித்து மாரியில் வாட்ஸ் ஆப் டிபியில் அவருடம் மாலதி என்ற பெண் இருப்பதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அனுஷியா, போலீஸார் புகார் செய்துள்ளார்.
இதையடுத்து அவர் வாங்கிக்கொடுத்த பைக்கையும் பறிமுதல் செய்து அவரைக் கைது செய்த சிறையில் அடைத்தனர்.