Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கும்பமேளா முடியுறதுக்குள்ள ரயில்கள் காலி..? அடித்து உடைக்கும் பயணிகள்..! - ரயில்வேக்கு செலவு!

Advertiesment
Prayagaj

Prasanth Karthick

, திங்கள், 17 பிப்ரவரி 2025 (08:42 IST)

ப்ரயாக்ராஜில் தொடர்ந்து ரயில்கள் பயணிகளால் தாக்கப்பட்டு வரும் நிலையில் கும்பமேளா முடியும்போது ரயில்களின் சேதம் அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது.

 

144 ஆண்டுகளுக்கு ஒருமுறை உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளா தற்போது தொடங்கி நடந்து வருகிறது. கும்பமேளா தொடங்கியது முதலே ஏராளமான மக்கள் தொடர்ந்து ப்ரயாக்ராஜுக்கு வந்த வண்ணம் உள்ளனர். தினசரி லட்சக்கணக்கான மக்கள் குவியும் நிலையில் போதிய ரயில் வசதிகள் இல்லாததால், மக்கள் அடித்து பிடித்து ரயில்களில் நுழைவதும், கண்ணாடிகளை உடைப்பதுமாக பெரும் அமளி ஏற்பட்டுள்ளது.

 

சமீபமாக பிரயாக்ராஜ் வழியாக செல்லும் ரயில்களில் ஏசி பெட்டி உள்ளிட்டவற்றின் கண்ணாடிகளை பயணிகள் கல்லால் அடித்து உடைக்கும் வீடியோக்களும் வைரலாகி வருகிறது. 

 

நேற்று லக்னோவில் இருந்து ப்ரயாக்ராஜ் செல்லும் சிறப்பு ரயில் அமேதியில் உள்ள ரயில் நிலையத்திற்கு வந்துள்ளது. அதில் ஏற ஏராளமான பயணிகள் காத்திருந்த நிலையில் கதவுகள் உள்பக்கமாக பூட்டியிருந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பயணிகள் ரயிலை தாக்கத் தொடங்கியதில் சில பெட்டிகள் சேதமடைந்துள்ளன.

 

தொடர்ந்து ப்ரயாக்ராஜ் வழியாக செல்லும் ரயில்கள், கும்பமேளா சிறப்பு ரயில்கள் சேதப்படுத்தப்பட்டு வரும் நிலையில், ரயிலுக்கு உள்ளேயும் இருக்கைகள் கிழிக்கப்பட்டு சேதாரம் செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கும்பமேளா முடிந்து இந்த ரயில்களின் பெட்டிகளை சீரமைக்கவே ரயில்வேக்கு தனியாக நிதி ஒதுக்கீடு செய்யும் நிலை உள்ளதாக பேசிக் கொள்ளப்படுகிறது.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டெல்லியின் அடுத்த முதல்வர் யார்? இன்னும் சில மணி நேரங்களில் அறிவிப்பு..!