இந்தியா முழுவதும் ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கும் நிலையில் ஏப்ரல் 15ஆம் தேதி முதல் ரயில்கள் மற்றும் விமானங்களுக்கு முன்பதிவு சற்றுமுன் தொடங்கி இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது
ஏப்ரல் 14ஆம் தேதி நள்ளிரவு ஊரடங்கு உத்தரவு முடிவடைந்ததன் பின்னர் புறப்படும் ரயில்களில் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து வெளியூரில் இருக்கும் பலர் முண்டியடித்துக்கொண்டு தங்கள் சொந்த ஊருக்கு செல்ல ஆன்லைனில் முன்பதிவு செய்துகொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
அதேபோல் ஊரடங்கு உத்தரவு காரணமாக வெளிநாட்டவர் பலர் இந்தியாவில் சிக்கி இருப்பதால் அவர்களை உடனடியாக வெளியேற்றுவதற்கு தற்காலிகமாக 18 சர்வதேச விமானங்கள் இயக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது
கடந்த மார்ச் 22ஆம் தேதி விமானங்கள் தடை செய்யப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் திறக்கப்பட உள்ளதால் வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு வந்த பலர் தங்கள் நாட்டுக்கு செல்ல தயாராகி வருகின்றனர். ஒரு வேளை திடீரென ஊரடங்கு உத்தரவை நீட்டிக்கப்பட்டாலும் சுகாதாரத்துறை அமைச்சகத்தின் ஆலோசனைக்குப் பின்னர் விமானங்களை இயக்குவது குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் கொரோனா பாதிப்பு இல்லாத நாடுகளுக்கு மட்டும் பாதுகாப்பாக விமானங்கள் விமான சேவை செய்ய வழிவகை செய்யப்படும் என்றும் விமான போக்குவரத்து செயலாளர் பிஎஸ் கரோலா அவர்கள் சற்றுமுன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். இருப்பினும் ஏப்ரல் 14ம் தேதிக்குப் பிறகு ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட வாய்ப்பு இல்லை என மத்திய அரசு ஏற்கனவே கூறி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது