Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மே இறுதிவரை செய்யப்பட்ட முன்பதிவுகள் ரத்து.. வெறிச்சோடிய காஷ்மீர்.. பெரும் நஷ்டம்..!

Advertiesment
Kashmir

Siva

, ஞாயிறு, 27 ஏப்ரல் 2025 (12:22 IST)
காஷ்மீர் சுற்றுப்பயணம் செல்வதற்காக மே இறுதிவரை செய்யப்பட்ட முன்பதிவுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டதாகவும், அதே போல் காஷ்மீரில் உள்ள ஹோட்டல்களில் செய்யப்பட்ட முன்பதிவுகளும் ரத்து செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதை அடுத்து, காஷ்மீர் மாநிலமே தற்போது சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடி கிடப்பதாக கூறப்படுகிறது. 
 
மே இருபதாம் தேதி வரையிலான ஹோட்டல் அறைகள் புக் செய்யப்பட்டிருந்த நிலையில், அவை அனைத்தும் ரத்து செய்யப்பட்டதாகவும், இதனால் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய வேண்டிய நிலையில் இருக்கிறோம் என்றும் காஷ்மீரின் முன்னணி ஓட்டல் அதிபர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
 
அது மட்டும் இன்றி, அனைத்து விமானங்களிலும் காஷ்மீருக்கு முன்பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், அவை அனைத்தும் ரத்து செய்யப்பட்டதாகவும், அவசர அவசரமாக காஷ்மீரில் இருந்து சுற்றுலா பயணிகள் அனைவரும் வெளியேறி கொண்டிருப்பதால், ’1990 ஆம் ஆண்டு தீவிரவாதம் ஆரம்பித்தபோது எப்படி இருந்ததோ, அதே நிலை தான் தற்போது உள்ளது என்றும் அவர் மிகவும் வருத்தத்துடன் கூறியுள்ளார்.
 
கடந்த ஆண்டு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பால் வருமானம் நன்றாக இருந்தது என்றும், மே 22க்கு முன்பு வரை சிறப்பாக இருந்த சுற்றுலா வருமானம் தற்போது அடியோடு நின்று விட்டது என்றும், இதனால் கோடிக்கணக்கில் விமான நிறுவனங்களுக்கும் ஹோட்டல் நிறுவனங்களுக்கும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தயார் நிலையில் இந்திய போர்க்கப்பல்கள்.. அரபிக்கடலில் நிறுத்தி வைப்பு.. எந்த நேரத்திலும் போர்?