Publish Date: Thu, 06 Jan 2022 (19:10 IST)
Updated Date: Fri, 07 Jan 2022 (16:47 IST)
பங்குச் சந்தை கடந்த இரண்டு நாட்களாக ஏற்றத்தில் இருந்ததால் முதலீட்டாளர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்த நிலையில் இன்று பங்கு சந்தை திடீரென 600 புள்ளிகளுக்கு மேல் சரிவடைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இன்றைய பங்கு சந்தை முடிவின்போது சென்செக்ஸ் 621 புள்ளிகள் சரிந்து 59 ஆயிரத்து 602 என வர்த்தக முடிவடைந்தது என்பது குறிபிடத்தக்கது.
அதேபோல் தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 179 புள்ளிகள் சரிந்து 17 ஆயிரத்து 746 என வர்த்தக முடிவடைந்தது என்பது குறிபிடத்தக்கது.
துறைமுக நிறுவனங்கள், கட்டுமான பொருட்கள் உற்பத்தி நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்குகள் வீழ்ச்சியடைந்தன என பங்குச்சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.