இன்று வாரத்தின் முதல் நாளே மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் சரிந்து உள்ளதை அடுத்து முதலீட்டாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
டந்த சில நாட்களாக மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் பெரும்பாலும் வீழ்ச்சி அடைந்து வருகிறது என்பதும் ஒரு சில நாட்கள் மட்டுமே உயர்ந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இன்று வாரத்தின் முதல் நாளே வர்த்தகம் ஆரம்பிக்கும் போது 400 புள்ளிகள் சரிந்தது. ஆனால் தற்போது படிப்படியாக மீண்டும் பங்குச்சந்தை உயர்ந்து தற்போது 80 புள்ளிகள் சரிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
சென்செக்ஸ் 124 புள்ளிகள் சரிந்து 57,004 என்ற அளவில் விற்பனையாகி வருகிறது. அதேபோல் தேசிய பங்குச்சந்தை நிப்டி 42 புள்ளிகள் சரிந்து 16,958 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஒமிக்ரான் தொற்று மிக வேகமாக பரவி வருவதை அடுத்தே பங்கு சந்தையில் சரிவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.