Publish Date: Tue, 04 Jan 2022 (16:28 IST)
Updated Date: Tue, 04 Jan 2022 (16:29 IST)
வாரத்தின் முதல் நாளான நேற்று பங்கு சந்தை மிக அதிகமாக உயர்ந்தது என்பதும் கிட்டத்தட்ட 900 புள்ளிகள் சென்செக்ஸ் உயர்ந்ததால் முதலீட்டாளர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தார்கள் என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் இன்று இரண்டாவது நாளாகவும் பங்குச் சந்தை உயர்ந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு மேலும் நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சற்றுமுன் பங்குச் சந்தை வர்த்தகம் முடிவடைந்த நிலையில் சென்செக்ஸ் 672 புள்ளிகள் உயர்ந்து 58 ஆயிரத்து 855 புள்ளிகளில் வர்த்தகம் முடிவடைந்துவிட்டது. அதேபோல் தேசிய பங்குச்சந்தை 180 புள்ளிகள் உயர்ந்து 17 ஆயிரத்து 805 என்ற புள்ளிகளில் வர்த்தகம் முடிவடைந்தது
கடந்த இரண்டு நாட்களாக பங்குச்சந்தை உயர்ந்து வருவது முதலீட்டாளர்களுக்கு பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடதக்கது