திருப்பதி கோவில் உண்டியல் பணம் ரூ.100 கோடி கொள்ளையா? அதிர்ச்சி குற்றச்சாட்டு..!
, திங்கள், 22 செப்டம்பர் 2025 (09:21 IST)
ஆந்திராவின் முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சிக்காலத்தில், திருப்பதி கோயிலின் உண்டியல் பணம் ரூ.100 கோடிக்கும் அதிகமாக கொள்ளை அடிக்கப்பட்டுள்ளதாக, பா.ஜ.க. தலைவர் பானு பிரகாஷ் ரெட்டி குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி, ஆந்திர அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அறங்காவலர் குழு உறுப்பினரான பானு பிரகாஷ் ரெட்டி, இந்த விவகாரம் குறித்து பேசியபோது, கோயில் ஊழியர் ரவிக்குமார், உண்டியல் பணத்தை எண்ணும் இடத்தில் திருடியதாகவும், இதற்கு பல ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் உடந்தையாக இருந்ததாகவும் குற்றம்சாட்டினார். இந்த கொள்ளையடிக்கப்பட்ட பணம், ஜெகன் மோகன் ரெட்டியின் தாதேபள்ளி அரண்மனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த குற்றச்சாட்டை தொடர்ந்து, சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன. இதையடுத்து, இந்த வழக்கை உயர் நீதிமன்றம் தானாகவே முன்வந்து சிஐடியிடம் ஒப்படைத்துள்ளது. இந்த விவகாரத்தில், பல குற்றவாளிகள் சிக்குவார்கள் என்றும், குற்றம் சாட்டப்பட்ட ரவிக்குமாரின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் பானு பிரகாஷ் ரெட்டி கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்