இலங்கையில் திருப்பதி கோயில் கட்டுமாறு ஆந்திர மாநில முதலமைச்சரிடம் இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் என்பவர் கோரிக்கை வைத்துள்ளார்.
இலங்கையின் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டைமான் இன்று ஆந்திர மாநிலத்திற்கு வருகை தந்து முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியை சந்தித்தார்.
இந்த சந்திப்பின்போது ஆந்திர மாநிலத்துடன் இலங்கை நட்புறவை வலுப்படுத்துவது குறித்து பேசப்பட்டது. மேலும் திரிகோணமலை துறைமுகத்தில் உள்ள தொழில் பூங்காவில் ஆந்திர மாநில அரசு முதலீடு செய்ய வேண்டும் என்றும் செந்தில் தொண்டமான் கோரிக்கை வைத்தார்.
அதனை தொடர்ந்து திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு இலங்கையில் இருந்து அதிக அளவில் பக்தர்கள் வந்து கொண்டிருப்பதாகவும் ஆனால் வயதானவர்கள் திருப்பதிக்கு வர முடியாமல் இருப்பதால் அவர்களின் வசதிக்காக இலங்கையில் ஒரு திருப்பதி திருமலை கோவில் அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார். இந்த கோரிக்கையை ஆந்திர மாநில முதலமைச்சர் ஏற்றுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.