Publish Date: Thu, 05 Jan 2023 (09:07 IST)
Updated Date: Thu, 05 Jan 2023 (09:08 IST)
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சொர்க்கவாசல் தரிசனத்திற்காக பக்தர்கள் வரும் நிலையில் இலவச தரிசன கவுண்ட்டர்கள் குறைக்கப்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த 2ம் தேதி வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. சொர்க்கவாசல் தரிசனத்திற்காக ஏராளமான பக்தர்கள் வந்த வண்ணம் இருந்த நிலையில் திருப்பதியில் 9 இடங்களில் கவுண்டர்கள் அமைக்கப்பட்டு இலவச தரிசன டிக்கெட்டுகள் விநியோகிக்கப்பட்டன.
தற்போது வைகுண்ட ஏகாதசி, துவாதசி தரிசனம் முடிந்து பரமபத வாசல் தரிசனத்திற்கு மட்டும் பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். தற்போது பக்தர்கள் வருகை குறைந்துள்ளதால் இலவச டோக்கன் கவுண்டர்களும் குறைக்கப்பட்டுள்ளது.
தேவஸ்தான அறிவிப்பின்படி, அலிபிரி பூதேவி வளாகம், சீனிவாசம் விடுதி வளாகம், விஷ்ணு நிவாசம் விடுதி வளாகம், கோவிந்தராஜசாமி 2வது சத்திரம் ஆகிய 4 இடங்களில் இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.