மகாராஷ்டிரா, கர்நாடகா என பல மாநில தேர்தல்களில் பாஜகவுக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் செயல்பட்டதாக கூறியுள்ள ராகுல்காந்தி தப்பு செய்தவர்களுக்கு தண்டனை நிச்சயம் என எச்சரித்துள்ளார்.
சமீபமாக நடந்த பல மாநில சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களில் தேர்தல் ஆணையம் பாஜகவை வெற்றிபெற வைப்பதற்காக பல்வேறு மோசடிகளை செய்துள்ளதாக ராகுல்காந்தி பரபரப்பு குற்றச்சாட்டை நேற்று வெளியிட்டார். பல பகுதிகளில் முறைகேடாக போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டிருப்பதாகவும் அவர் வாக்காளர் பட்டியலை காட்டி பேசினார்.
இந்நிலையில் ராகுல்காந்தி ஆதாரம் இல்லாமல் தேர்தல் ஆணையம் மீது பழி சுமத்துவதாகவும், அவர் சம்பந்தப்பட்ட ஆதாரங்களை தேர்தல் ஆணையத்திற்கு அளிக்க வேண்டும் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.
அதை தொடர்ந்து இன்று எக்ஸ் தளத்தில் வீடியோவுடன் பதிவிட்டுள்ள ராகுல்காந்தி “வாக்கு திருட்டு என்பது வெறும் தேர்தல் மோசடி மட்டுமல்ல, அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்திற்கு எதிரான ஒரு பெரிய துரோகமாகும். நாட்டின் குற்றவாளிகள் இதைக் கேட்கட்டும் - காலம் மாறும், தண்டனை நிச்சயமாக வழங்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
Edit by Prasanth.K