கர்நாடகாவில் உள்ள வாக்காளர் பட்டியலில் தகுதியற்றவர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், தகுதியானவர்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டிய நிலையில், கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரி அவருக்கு கடுமையான தொனியில் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த விவகாரத்தில் தேவையான நடவடிக்கைகளை தொடங்குவதற்காக, பிரமாண பத்திரம் ஒன்றை தாக்கல் செய்யுமாறு அந்த கடிதத்தில் ராகுல் காந்தியை கேட்டு கொண்டுள்ளார்.
இந்த கடிதத்தில் உள்ள முக்கிய அம்சங்கள் இதோ:
"இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது, வாக்காளர் பட்டியலில் தகுதியற்ற வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், தகுதியான வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும் நீங்கள் குறிப்பிட்டீர்கள் என தெரிகிறது
இதுகுறித்து தேவையான நடவடிக்கைகளை தொடங்க, தேர்தல் விதிகள் 1960, விதி 20(3)(b)-ன் கீழ் இணைக்கப்பட்டுள்ள பிரமாண பத்திரம்/உறுதிமொழி படிவத்தில் கையெழுத்திட்டு, அத்தகைய வாக்காளர்களின் பெயர்(கள்) உடன் அதை திருப்பி அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகளுக்கு பிறகு, இந்த விவகாரம் முக்கியத்துவம் பெற்றுள்ள நிலையில், தேர்தல் ஆணையம் இது குறித்துத் தீவிர நடவடிக்கை எடுக்கத் தயாராக உள்ளது என்பதையே இந்த கடிதம் உணர்த்துகிறது.