கேரள சட்டசபையில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி எம்எல்ஏக்களுக்கு இடையே கடும் அமளி ஏற்பட்ட நிலையில் சபை காவலர்கள் தாக்கியதில் 3 எம் எல் ஏக்கள் காயம் அடைந்துள்ளதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கேரள சட்டசபை கூட்டம் நேற்று நடந்த நிலையில் அதில் 16 வயது மாணவியை நான்கு பேர் தாக்கிய சம்பவம் குறித்து எதிர்க்கட்சிகள் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்தனர். ஆனால் சபாநாயகர் அதற்கு அனுமதி தரவில்லை என்பதால் எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் கடும் கண்டனம் தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர்.
சபாநாயகர் முன்பு அவர்கள் தரையில் அமர்ந்து எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் உடனடியாக அவர்களை அப்புறப்படுத்த சபை காவலர்களுக்கு சபாநாயகர் உத்தரவிட்டார். இதனால் சபை காவலர்களுக்கும் எம்எல்ஏக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்ட நிலையில் பெண் எம்எல்ஏ ரமா உள்பட 3 எம்எல்ஏக்கள் காயம் ஏற்பட்டதாகவும் காங்கிரஸ் எம்எல்ஏ ஒருவர் மயக்கம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் சபை காவலர்கள் தாக்கியதில் பெண் எம்எல்ஏ ஒரு பட மூன்று எம்எல்ஏக்கள் காயம் அடைந்ததற்கு பெரும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது.