Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

துப்பாக்கிக் கலாச்சாரம் முடிவுக்கு வருகிறதா? அதிபர் பைடன் முக்கிய உத்தரவில் கையெழுத்து

துப்பாக்கிக் கலாச்சாரம் முடிவுக்கு வருகிறதா? அதிபர் பைடன் முக்கிய உத்தரவில் கையெழுத்து
, புதன், 15 மார்ச் 2023 (23:08 IST)
அமெரிக்காவில் துப்பாக்கிகள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள்  தடை செய்வதில் அரசு உறுதியாக உள்ளதாக அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க நாட்டில் அதிபர் ஜோ பைடன் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. அடுத்தாண்டு அதிபர் தேர்தல் வரவுள்ள நிலையில், இதற்கான பிரச்சாரம் நாடு முழுவதும் தீவிரமாக நடந்து வருகிறறது.

இந்த நிலையில், அமெரிக்காவில் சமீபகாலமாக துப்பாக்கி மற்றும் பயங்கர ஆயுதங்கள் கலாச்சாரம் அதிகரித்துள்ளது.

இதன் மூலம், சிலர் அப்பாவி மக்கள், கல்லூரிகள்- பள்ளிகளிலுள்ள மாணவர்கள் மீது குறித்துவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இது அந்த நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இளைஞர்கள் ஆயுதங்களை தவறாகப் பயன்படுத்து சமூக ஆர்வலர்கள், மற்றும் ஆட்சியாளர்களிடையே கவலையை அதிகரித்துள்ளது.

சமீபத்தில்,துப்பாக்கிச் சூடு நடந்த லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியிலுள்ள மான்டேடி பார்க் சென்ற அதிபர் அங்கு இரந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.  இதற்கான இரங்கல் கூட்டத்தில் பங்கேற்ற அதிபர் பைடன், துப்பாக்கி, தோட்டாக்கள் உள்ளிட்ட ஆயுதங்கள்  தடை செய்வதில் உறுதியாக இருப்பதாகத் தெரிவித்தார்.

மேலும்,  அமெரிக்காவில் துப்பாக்கிக் கலாச்சாரம் தீவிரமடைந்துள்ளதால், இதை கட்டுப்படுத்தும் நோக்கில், துப்பாக்கி வாங்குவோரின் பின்னணி விவரம், சோதனைகளை விரைபடுத்தும், புதிய உத்தரவில் அதிபர் ஜோ பைடன் கையெழுத்திட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

33 கொலை வழக்குகளில் தொடர்புடைய ரவுடிக்கு 1310 ஆண்டுகள் சிறை!